ரணிலின் கட்சிக்கு தாவப்போகும் முக்கிய கட்சிகள்: ஹரிசன் பரபரப்பு தகவல்
சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணியில் உள்ள தமிழ், முஸ்லிம்
கட்சிகள் எல்லாம் ரணில் விக்ரமசிங்கவின் பக்கம் வந்துவிடும்” என ஐக்கிய மக்கள் சக்தியில் இருந்து ஐக்கிய தேசியக் கட்சி பக்கம்
தாவியுள்ள முன்னாள் அமைச்சர் பி.ஹரிசன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறுகையில், "எமது ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் ஒருவர் தற்போது ஜனாதிபதியாக இருக்கின்றார்.
தேர்தலில் ஜனாதிபதியை ஆதரிப்பார்கள்

அவருக்கான ஆதரவு பெருகி வருகின்றது. தமிழ் முற்போக்குக் கூட்டணியும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு வழங்கவுள்ளது.
தற்போது சஜித் கூட்டணியில் உள்ளவர்கள் அடுத்த தேர்தலில் ஜனாதிபதியை
ஆதரிப்பார்கள்.
ஐக்கிய மக்கள் கூட்டணியில் உள்ள தமிழ், முஸ்லிம் கட்சிகள் எல்லாம் ரணில்
பக்கம் வந்துவிடும்" என தெரிவித்துள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |