உக்ரைன்- ரஷ்ய போருக்கு மத்தியில் பென்டகன், ரஷ்யாவுக்கு இடையில் கலந்துரையாடல்
அமெரிக்க (America) பாதுகாப்பு மையமான பென்டகனின் தலைவருக்கும் ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சருக்கும் இடையில் தொலைபேசி உரையாடல் குறித்து பல்வேறு கருத்துக்கள் வெளியாகி வருகின்றன.
ஏற்கனவே நடைபெற்று வரும் உக்ரைன்- ரஷ்ய நாடுகளுக்கு இடையிலான போரை நிறுத்துவது தொடர்பில் பேச்சுக்கள் இடம்பெற்று வரும் நிலையில், குறித்த இரண்டு பேரும் பேசியுள்ளமை, பேசு பொருளாக மாறியுள்ளது.
இந்த தொலைபேசி உரையாடல் குறித்து பென்டகனும், ரஷ்ய பாதுகாப்பு அமைச்சும் தகவல்களை வெளியிட்டுள்ளன.
வெளிப்படையான பேச்சுவார்த்தை
இதன்படி, இரு நாடுகளுக்கும் இடையில் வெளிப்படையான பேச்சுவார்த்தை அவசியமாக இருக்கிறது என்ற கருத்தை உரையாடலின்போது பென்டகன் தலைவர் லொயிட் ஒஸ்டின் ( Lloyd Austin) முன்வைத்ததாக பென்டகனின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், அமெரிக்காவின் ஆயத விநியோகம் காரணமாகவே உக்ரைன்- ரஷ்ய போர் நீடிக்கிறது என்றும், இந்த ஆயுத உதவி நிலைமையை மேலும் மோசமாக்கும் என்றும் தாம் கூறியுள்ளதாக ரஷ்ய பாதுகாப்புத்துறை அமைச்சர் அண்ட்ரி பெலோசோவ் (Andrei Belousov) குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இரண்டு தரப்பிலும் கூறப்பட்ட தகவல்களுக்கு அப்பால் பேசப்பட்ட முக்கிய விடயங்கள் தொடர்பில் தகவல்கள் எவையும் வெளியாகவில்லை.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |




