உக்ரைன் விவகாரம் தொடர்பாக பிரதமர் மோடி, அதிபர் ஜோ பைடன் ஆகியோர் இடையே முக்கிய பேச்சுவார்த்தை
குவாட் உச்சிமா நாட்டையொட்டி உக்ரைன் தொடர்பாக இந்திய பிரதமர் மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ஆகியோர் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
மே 24-ம் திகதி டோக்கியோவில் நடைபெறும் குவாட் உச்சி மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
I look forward to meeting @POTUS @JoeBiden, PM @kishida230 and newly elected Australian PM @AlboMP. Our interactions will give us the opportunity to discuss bilateral relations between our respective nations and ways to further deepen developmental cooperation.
— Narendra Modi (@narendramodi) May 22, 2022
அவர்களின் சந்திப்பின் போது, இரு தலைவர்களும் இடையே உக்ரைனில் நடந்து வரும் தற்போதைய சூழ்நிலை தொடர்பாக “ஆக்கபூர்வமான உரையாடலை" நடத்துவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இச் சந்திப்பு பெப்ரவரி 24 அன்று உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பு அதன் நான்காவது மாதத்திற்குள் நுழையும் நாளில் இந்த சந்திப்பு இடம்பெறுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஜப்பானுக்கு தனது இரண்டு நாள் பயணத்திற்கு முன்னதாக, பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் இருதரப்பு சந்திப்பை நடத்துவார் என்று கூறினார், அங்கு இரு நாடுகளுக்கும் இடையிலான பன்முக இருதரப்பு உறவுகளை மேலும் பலப்படுத்துவது குறித்து அவர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளனர்.
இச்சந்திப்பின் போது "பிராந்திய வளர்ச்சிகள் மற்றும் சமகால உலகளாவிய பிரச்சனைகள் குறித்தும் கலந்துரையாடப்படும்" என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.