ஐ.நா எமது அரசை அங்கீகரிக்க வேண்டும் - தலிபான் அமைப்பு
ஆப்கானிஸ்தான் மக்கள் தம்மை ஆதரிப்பதாகவும் இதனால், ஐக்கிய நாடுகள் அமைப்பும் தம்மை அங்கீகரிக்க வேண்டும் என தலிபான் அமைப்பினர் மீண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானின் ஐக்கிய நாடுகள் அமைப்புக்கான பிரதிநிதியாக முஹமட் சுஹைல் ஷாஹீன் என்பவரை தலிபான்கள் நியமித்தனர்.
ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ள தலிபான்கள் அனுமதி கோரினர். எனினும் அதற்கு ஐ.நா அனுமதி வழங்கவில்லை.
அத்துடன் ஆப்கானிஸ்தான் முன்னாள் அரச பிரதிநிதியும் பொதுச்சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.
இந்த நிலையில், தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பு ஒன்றை இட்டுள்ள சுஹைல் ஷாஹீன், காபூல் நிர்வாகம் தற்போது செயற்பாட்டில் இல்லை. ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய எமிரேட்ஸ் அரசின் ஆட்சியே தற்போது நடந்து வருகிறது.
தற்போதைய அரசே ஆப்கானின் உண்மையான பிரதிநிதி. இதனால் எமக்கு ஐ.நா பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொள்ளும் தகுதி உள்ளது. ஆப்கான் மக்கள் எம்மை ஆதரிக்கின்றனர்.
இதனடிப்படையில் ஐ.நாவுக்கு ஆப்கானின் புதிய அரசாங்கத்தை அங்கீகரிக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்து கொண்டு உலகம் அங்கீகரிக்கும் நாடாக ஆப்கானிஸ்தானை உருவாக்க தலிபான்கள் முயற்சித்து வந்தனர்.
இதனடிப்படையில், அமெரிக்கா, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய ஒன்பது பேர் கொண்ட ஐ.நா குழுவை நியமிக்குமாறு தலிபான் கோரிக்கை விடுத்தது.
அதற்கு எவ்வித பதிலும் கிடைக்கவில்லை. எனினும் முயற்சிகளை கைவிடாது தலிபான்கள் தொடர்ந்து வருகின்றனர்.