அமெரிக்காவிற்கு தலிபான்கள் கடும் எச்சரிக்கை!
ஆப்கானிஸ்தானுக்கு அமெரிக்கா ‘டிரோன்களை’ அனுப்பினால் விளைவுகள் மோசமாக இருக்கும் என தலிபான்கள் எச்சரித்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியேறிய தொடங்கியதும் தலிபான்கள் அந்த நாட்டை ஆக்கிரமித்தனர்.
கடந்த மாதம் 15ம் திகதி ஒட்டுமொத்த ஆப்கானிதானும் தலிபான்கள் வசமானதை தொடர்ந்து, 30ம் திகதி அமெரிக்க படைகள் அங்கிருந்து முழுமையாக வெளியேறின.
முன்னதாக காபூல் விமான நிலையத்தில் நடந்த வெடிகுண்டு தாக்குதலுக்கு பதிலடியாக ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ். தீவிரவாதிகளை குறிவைத்து அமெரிக்கா ‘டிரோன்’ (ஆளில்லா குட்டி விமானம்) மூலம் தாக்குதல் நடத்தியது.
இதில் ஐ.எஸ். தீவிரவாதிகளுடன் அப்பாவி பொதுமக்கள் சிலரும் கொல்லப்பட்டனர். இதற்கு அமெரிக்க இராணுவம் மன்னிப்பு கோரியது. இந்தநிலையில் ஆப்கானிஸ்தானுக்கு அமெரிக்கா ‘டிரோன்களை’ அனுப்பினால் விளைவுகள் மோசமாக இருக்கும் என தலிபான்கள் எச்சரித்துள்ளனர்.
இது குறித்து தலீபான் செய்தி தொடர்பாளர் ஜபிஹுல்லா முஜாகித் (Zabiullah Mujahid) டுவிட்டரில் வெளியிட்ட பதிவு ஒன்றில்,
‘‘ஆப்கானிஸ்தானின் வான்வெளி அமெரிக்க டிரோன்களால் ஆக்கிரமிக்கப்படுவதால், அனைத்து சர்வதேச உரிமைகள், சட்டம் மற்றும் ஆப்கானிஸ்தான் இஸ்லாமிய அமீரகம் மீதான உறுதிபாட்டை அமெரிக்கா மீறுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
இந்த மீறல்கள் சரிசெய்யப்பட வேண்டும் மற்றும் தடுக்கப்பட வேண்டும். இல்லையென்றால் மோசமான, எதிர்மறையான விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என குறிப்பிட்டுள்ளார்.
புதிய அரசியல் யாப்பு என்ற மாயைக்குள் அமிழ்ந்து போகும் தமிழ் அரசியல்! 21 மணி நேரம் முன்
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri
ஈரான் மீது திரும்பும் உலக நாடுகள் கவனம்: உக்ரைனுக்கு நல்லதல்ல: ஜெலென்ஸ்கி புதிய நகர்வு News Lankasri
புதிய கம்பெனிக்கு பார்ட்னர் ஆன நிலா, ரூ. 5 லட்சம் ரெடியானதா, ஹேப்பி எபிசோட்... அய்யனார் துணை சீரியல் Cineulagam
ஈரான் போரில் அதிரடி திருப்பம்... ஹார்முஸ் பகுதியில் 5,000 கடற்படை வீரர்களைக் களமிறக்கும் ட்ரம்ப் News Lankasri