பெண்கள் உரிமை தொடர்பில் தலிபான் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்துள்ள மலாலா
ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான் அரசாங்கத்தையும், பெண்கள் மீதான அதன் அடக்குமுறைக் கொள்கைகளையும் சவால் செய்யுமாறு, அமைதிக்கான நோபல் பரிசை வென்றவரான, மலாலா யூசுப்சாய் (Malala Yousafzai) முஸ்லிம் தலைவர்களை வலியுறுத்தியுள்ளார்.
எளிமையாகச் சொன்னால், ஆப்கானிஸ்தானில் உள்ள தலிபான்கள் பெண்களை மனிதர்களாகப் பார்ப்பதில்லை என்று இஸ்லாமிய நாடுகளில் பெண் கல்வி குறித்து பாகிஸ்தான் நடத்திய சர்வதேச உச்சி மாநாட்டில் அவர் கூறியுள்ளார்.
தெளிவற்ற சட்டங்கள்
பெண்கள் மற்றும் பெண்கள் கல்வி, வேலைகளை அணுகுவதைத் தடுப்பது உள்ளிட்ட தாலிபானின் கொள்கைகளை இஸ்லாம் ஏற்றுக்கொள்ளவில்லை என்று யூசுப்சாய் முஸ்லிம் தலைவர்களிடம் கூறியுள்ளார்.
27 வயதான அவர், பெண் கல்வி பற்றிப் பேசியமைக்காக, பாகிஸ்தானிய தலிபான் துப்பாக்கிதாரியால் தலையில் சுடப்பட்ட பின்னர் 15 வயதில் பாகிஸ்தானிலிருந்து வெளியேறினார்.
இந்தநிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இஸ்லாமாபாத்தில் நடந்த மாநாட்டில் உரையாற்றிய அவர், தனது சொந்த நாட்டிற்கு திரும்பி உச்சிமாநாட்டில் உரையாற்றுவது தொடர்பில் தாம், மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளதாக கூறியுள்ளார்
இந்தநிலையில் தலிபான் அரசாங்கம் மீண்டும் "பாலின இனவெறி முறையை" உருவாக்கியுள்ளதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
தங்கள் தெளிவற்ற சட்டங்களை மீறத் துணிந்த பெண்களையும் சிறுமிகளையும் தண்டிப்பதற்கு தலிபான்கள் துணிந்து வருகிறார்கள்,
அவர்களை அடித்து, தடுத்து வைத்து, அவர்களுக்கு தீங்கு விளைவிக்கிறார்கள்" என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
யூசுப்சாயின் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிப்பு
தலிபான் அரசாங்கம், தங்கள் குற்றங்களை கலாசார மற்றும் மத நியாயப்படுத்தலில் மறைக்கிறது. ஆனால் உண்மையில், அவை எங்கள் நம்பிக்கை நிற்கும் அனைத்திற்கும் எதிரானது என்று மலாலா யூசுப்சாய் குறிப்பிட்டுள்ளார்.
ஆறாம் தரத்திற்கு மேல் பெண்கள் கல்வி கற்பது முற்றிலுமாகத் தடைசெய்யப்பட்ட உலகின் ஒரே நாடு ஆப்கானிஸ்தான் என்றும் யூசுப்சாய் கூறியுள்ளார்.
இந்தநிலையில் மலாலா யூசுப்சாயின் குற்றச்சாட்டுக்களுக்கு பதிலளிக்க தலிபான் நிர்வாகம் மறுத்து விட்டதாக வெளிநாட்டு செய்திச்சேவை ஒன்று தெரிவித்துள்ளது.
இதேவேளை இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பு, பாகிஸ்தான் அரசாங்கம் மற்றும் முஸ்லிம் உலக லீக் நடத்திய உச்சிமாநாட்டிற்கு தலிபான் அரசாங்கத் தலைவர்கள் அழைக்கப்பட்டனர், ஆனால் அவர்கள் கலந்து கொள்ளவில்லை.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |