டெங்கு நோய் நிலை தீவிரமாக பரவலடைய முன் முற்காப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் - எம்.பி.எம்.ஹில்மி
டெங்கு நோய் நிலை தீவிரமாக பரவலடைய முன் பின்வரும் முற்காப்பு நடவடிக்கைகளை தொடர்ச்சியாக மேற்கொள்ளுமாறு ஒவ்வொருவரும் வேண்டப்படுகின்றனர் என மூதூர் சுகாதார வைத்திய அத்தியட்சகர் எம்.பி.எம்.ஹில்மி (M.P.M.Hilmi) அறிவித்துள்ளார்.
திருகோணாமலை, மூதூர் பொதுச் சுகாதார பரிசோதகர்கள் தாஹா நகர், அக்கறைச்சேனை, ஏசி வீதி, கேணிக்காடு போன்ற பகுதிகளில் மேற்கொண்ட பரிசோதனை நடவடிக்கைகளில் டெங்கு நோய் தொற்றுக்கான இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மூதூர் பிரதேசத்திற்குட்பட்ட மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டு வருவதாகவும் வைத்தியர் எம்.பி.எம்.ஹில்மி தெரிவித்துள்ளார்.
அத்தோடு,
1) சுற்றுபுறத்திலுள்ள நீர் தேங்கும் (சிரட்டை, பேணி, யோகட் கப், இளநீர் கோம்பை, வெற்றுப் பாத்திரங்கள், டயர், போத்தல்கள்) பொருட்களை இனங்கண்டு அழித்தல்/அகற்றல்.
2) கிணறுகளுக்கு கப்பி வகை மீன் இட்டு, கிணற்றுக்கு பாதுகாப்பான மூடியிடல்.
3) பாவிக்காத மலசல கூடமிருப்பின் அகற்றல் / பாதுகாப்பாக மூடிவைத்தல். (இடை இடையே பாவிப்பவர்களாயின் வாளியில் நீர் சேமிப்பதை தவிர்த்தல்)
4) நீரை சேமித்து வைக்கும் தாங்கி / கொள்கலன்களை தினமும் அவதானித்து சுத்தம் செய்து பாதுகாப்பாக மூடி வைத்தல்.
5) கூரைப் பீலிகளில் நீர் தேங்காத வகையில் சுத்தம் செய்தல்
6) குளிர்சாதனப் பெட்டியின் பின் பகுதியில் நீர் தேங்கும் வகையில் இருந்தால் தினமும் சுத்தம் செய்தல்.
7) வீட்டின் முன்பகுதி வடிகாண்களில் நீர் வடியாவண்ணம் சுத்தம் செய்து நீரை வடியவிடல்.
8) உங்களுக்கு சொந்தமான வேறு இடங்களில் வெற்றுக் காணிகள் இருந்தால் அடிக்கடி சென்று பார்வையிட்டு அவற்றை சுத்தம் செய்தல்.
இவ்வாறான செயற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் தெரிவித்துள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 1 மணி நேரம் முன்

சரிகமப L'il Champs வின்னர் திவினேஷ் தனது தந்தைக்கு கொடுத்த மிகப்பெரிய பரிசு.. இதோ பாருங்க Cineulagam

சிறந்த அப்பாவுக்கு உதாரணமாக திகழும் ஆண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

ஆபரேஷன் சிந்தூர்... தாக்குதலுக்கு முன்பே பாகிஸ்தானுக்கு தெரியும்: வெளிவிவகார அமைச்சர் கருத்தால் குழப்பம் News Lankasri
