அசோக ரன்வலவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை: மத்தும பண்டார விடுத்த சவால்..
முன்னாள் சபாநாயகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அசோக ரன்வல வாக்காளர்களுக்கு பொறுப்புக்கூறல் மற்றும் நாடாளுமன்ற விதிகளை மீறியதால், அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு ஜே.வி.பி-க்கு சவால் விடுப்பதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
ஒழுக்காற்று நடவடிக்கை
மேலும் தனக்கு வாக்களித்த மக்களுக்கு தான் கலாநிதி பட்டம் பெற்றதாகக் கூறி பொதுத் தேர்தலில் போட்டியிட்டதாகவும், பின்னர் பட்டச் சான்றிதழை வழங்கத் தவறிவிட்டதால், பொது மக்களின் நம்பிக்கையை அப்பட்டமாக மீறியதாகவும் அவர் கூறினார்.

ஜே.வி.பி போன்ற ஒரு கட்சி மோசடி மற்றும் ஊழலை கடுமையாக விமர்சிக்கும் போது, பொய் சொன்னதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் அசோக ரன்வலவுக்கு எதிராக இன்னும் ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்காதது ஆச்சரியமாக இருக்கிறது என்று மத்தும பண்டார மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அண்ணன்கள் வீட்டில் ஏற்பட்ட அவமானம், அழுத கோமதிக்கு வந்த சந்தோஷ செய்தி... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 கொண்டாட்ட எபிசோட் Cineulagam
கார்த்திகை தீபம் சீரியல் புகழ் கார்த்திக் ராஜ் பிறந்தநாள் கொண்டாட்டம்... வெளிவந்த போட்டோஸ் Cineulagam