வடபகுதி கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதிகளை சந்தித்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர்
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரும் மக்களவை உறுப்பினருமான டி. ராஜா, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதிநிதிகளுடன் இணைந்து வடபகுதி கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதிகளை யாழ்ப்பாணத்தில் சந்தித்து கலந்துரையாடியள்ளார்.
குறித்த சந்திப்பானது நேற்று(06.07.2026) இடம்பெற்றுள்ளது.
இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறல்
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் 83ஆவது ஆண்டு நிறைவு விழா கொண்டாட்டத்திற்காக இலங்கை வந்த இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் டி. ராஜா யாழ்ப்பாணத்தில் பல சந்திப்புக்களில் பங்கேற்றார்.

அதனொரு அங்கமாக யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நேற்று வடக்கு மாகாண கடற்றொழில் அமைப்புக்களின் பிரதிநிதிகளை சந்தித்து கலந்துரையாடி, இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறல் உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பாக கேட்டறிந்தார்.
இதன்போது இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் வீரசிங்க, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான வீரசுமன வீரசிங்க மற்றும் இந்துஷன் பூபாலசிங்கம் ஆகியோரும் உடனிருந்தனர்.
சவப்பெட்டியில் டிரம்ப் குடும்பம்: “ரத்தத்திற்கு ரத்தம்” ஈரானின் விளம்பர பலகையால் வெடித்த சர்ச்சை News Lankasri
ஐரோப்பாவை வாட்டும் வெப்பம்... குரோஷியாவின் கடலடி அருங்காட்சியகத்தில் குவியும் சுற்றுலாப் பயணிகள்! Manithan