லெபனான் மீது இஸ்ரேல் வான்வெளி தாக்குதல்: பாலஸ்தீனிய ஆயுதக்குழுவினர் பலி
லெபனான் மீது இஸ்ரேல் நடத்திய வான்வெளி தாக்குதலில் பாலஸ்தீனிய ஆயுதக்குழுவினர் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல ஆண்டுகளாக மோதல் நிலவிவரும் நிலையில் மேற்குகரையின் சில பகுதிகள் இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ளது.
குறித்த பகுதிகளில் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினருக்கும், பாலஸ்தீனிய ஆயுதக்குழுக்களுக்கும் இடையே மோதல் சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில், சிரியா எல்லையில் லெபனான் நாட்டின் குவசயா நகரில் பதுங்கி இருந்த பாலஸ்தீனிய ஆயுதக்குழுவினர் மீது இஸ்ரேல் விமானப்படை இன்று வான்வெளி தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலில் பாலஸ்தீனிய ஆயுதக்குழு சேர்ந்த 5 பேர் உயிரிழந்துள்ளதுடன், மேலும், 10 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த தாக்குதலையடுத்து பாலஸ்தீனிய ஆயுதக்குழு இஸ்ரேல் மீது பதிலடி தாக்குதல் நடத்தலாம் என அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |