பிரித்தானியாவில் வெடித்த வன்முறை.. லண்டன் பொலிஸார் மீது தாக்குதல்
லண்டனில் முன்னெடுக்கப்பட்ட புகலிடக் கோரிக்கையாளர்கள் போராட்டத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
நேற்று லண்டன் - கேனரி வார்ப் பகுதியில் நடந்த புகலிடக் கோரிக்கையாளர்கள் எதிர்ப்பு போராட்டத்தில் வன்முறை வெடித்துள்ளது.
இதன் போது, அதிகரித்த வன்முறை சம்பவத்தில் பொலிஸார் மீது புகலிடக் கோரிக்கையாளர்கள் தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் லண்டன் - கேனரி வார்ப் பகுதி பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
மர்ம நபர்கள்..
பொலிஸ் அதிகாரி ஒருவரின் முகத்தில் போராட்டக்காரர்கள் தாக்கியதை அடுத்து நான்கு பேர் வரை அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
அமைதியான முறையில் நடந்து வந்த இந்த போராட்டத்தில் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் புகுந்து பொலிஸ் அதிகாரிகளிடம் கடுமையாக நடந்து கொண்டுள்ளனர்.
மாலை 4.30 மணியளவில் போராட்டக்காரர்களில் சிலர் அருகில் இருந்த வணிக வளாகத்திற்குள் நுழைய முயன்றபோது களத்தில் வன்முறை வெடித்தது. அப்போது பொலிஸ் அதிகாரி ஒருவர் முகத்தில் தாக்கப்பட்டார்.
ஆனால் அதிர்ஷ்டவசமாக அவர் பெரிய காயங்கள் எதுவும் இல்லாமல் தப்பினார். இந்த சம்பவத்தை தொடர்ந்து 4 பேர் கைது செய்யப்பட்டு அவர்கள் மீது போதைப்பொருள் வைத்திருந்தது, காவல்துறை அதிகாரியை தாக்கியது மற்றும் பொது ஒழுங்கை மீறியது ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளது.





ஊழல் ஒழிப்பு கோஷத்தை ஊளையிடுதல் ஆக்கிய ரணில்..! 16 மணி நேரம் முன்

சிறகடிக்க ஆசை வெற்றி வசந்த் மனைவிக்கு என்ன ஆச்சு.. கதறி அழும் பொன்னி சீரியல் வைஷ்ணவி.. வைரல் வீடியோ Cineulagam

திருமண பேச்சுக்கு அழைத்து இளைஞரை அடித்துக் கொன்ற காதலி குடும்பம்! POCSO வழக்கில் காதலன் News Lankasri

ரஷ்யாவில் கொல்லப்பட்ட வட கொரிய வீரர்கள் குடும்பங்களுக்கு... கிம் ஜோங் உன் அளித்த உறுதி News Lankasri

ரஷ்யாவின் மலிவு விலை கச்சா எண்ணெய் வாங்கி... உக்ரைனுக்கு டீசலாக ஏற்றுமதி செய்யும் இந்தியா News Lankasri
