ஊரடங்கு நேரத்தில் மதுபானசாலை முன்பாக வாள்வெட்டு சம்பவம்: மூவர் காயம் (Photos)
வவுனியா பழைய பேருந்து நிலையத்திற்கு அருகாமையிலுள்ள மதுபானசாலைக்கு முன்பாக ஊரடங்கு அமுலிலிருந்த நேரத்தில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் மூவர் காயமடைந்துள்ளனர்.
மதுபானசாலை மூடியதன் பின்னர் மதுபானசாலைக்கு முன்னால் இன்று மாலை 6.30 மணியளவில் மூவருக்கிடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டது.
இதன்போது ஓர் நபர் தனது மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த மரம் அறுக்கும் வாள் மூலம் மற்றைய இருவர் மீதும் தாக்குதல் மேற்கொண்டுவிட்டு அவ்விடத்திற்குச் செல்ல முற்பட்டுள்ளார்.
அப்போது மற்றைய இருவரும் இணைந்து அவரின் வாளை பறித்து அவர் மீதும் வாள் மற்றும் கற்களால் தாக்குதல் மேற்கொண்டதுடன், தாக்குதலில் காயமடைந்த நபர் அங்கிருந்து வவுனியா பொலிஸ் நிலையத்திற்குச் சென்று தஞ்சமடைந்தார்.
அதன் பின்னர் மற்றைய இருவரும் அவ்விடத்திற்கு வாள்களுடன் வெளியேறிச் சென்றதுடன்
சம்பவம் தொடர்பில் வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.




ஈரானிய ட்ரோன்கள் இனி காற்றில் கரையும்... ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இஸ்ரேல் வழங்கிய ஆயுதம் News Lankasri
விஜயகுமார் வீட்டில் கொண்டாட்டம்... குட்டி வரவுக்காக காத்திருக்கும் குடும்பம்! வைரல் புகைப்படங்கள் Manithan
லண்டனை உலுக்கிய சம்பவத்தில் புதிய திருப்பம்... தாக்குதலில் ஈடுபட்டவர் மீது கொலை முயற்சி வழக்கு News Lankasri