இரு குழுக்களுக்கிடையே இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவம்: மேலும் இருவர் கைது
மட்டக்களப்பு - நாவற்கேணி சந்தியில் இரு குழுக்களுக்கிடையே கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய இருவரை கைது செய்துள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு நேற்று கைது செய்யப்பட்டவர்களுடன் இதுவரை இச்சம்பவத்துடன் தொடர்புடைய நால்வர் கைது செய்யப்பட்டுள்ளதோடு இரண்டு கத்தி மற்றும் ஒரு வாள் என்பனவும் மீட்கப்பட்டுள்ளன.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரு குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலில் இருவர் வாள்வெட்டுக்கு இலக்காகிப் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் இருவர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் இந்த வாள்வெட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் சிலர் தலைமறைவாகி இருந்து வந்த நிலையில் இருவர் நேற்று பொலிஸ் நிலையத்தில் வாளுடன் சரணடைந்ததையடுத்து குறித்த இருவரையும் கைது செய்துள்ளனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை நீதிமன்றத்தில் முன்னிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.