முள்ளியவளையில் வாள்வெட்டு: எழுவர் மருத்துவமனையில் அனுமதி
முல்லைத்தீவு - முள்ளியவளை பகுதியில் இடம்பெற்ற இரு குழுக்களுக்கிடையிலான வாள்வெட்டு சம்பவத்தின் போது காயமடைந்த எழுவர் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
இரு இளைஞர் குழுக்களுக்கிடையில் நேற்று மாலை இந்த வாள்வெட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
முள்ளியவளை காட்டு விநாயகர் ஆலயத்திற்கு அருகில் இரு இளைஞர்களுக்கிடையில் ஏற்பட்ட முரண்பாடு வாள்வெட்டில் முடிந்துள்ளது.
இந்த வாள்வெட்டு சம்பவத்தின் போது 4 ஆம் வட்டாரம் முள்ளியவளை பகுதியினை சேர்ந்த நான்கு பேர் வாள் வெட்டிற்கு இலக்காகியுள்ளதுடன், மேலும் காயமடைந்த மூவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இந்த வாள்வெட்டு சம்பவம் தொடர்பில் காயத்துடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக
முள்ளியவளை பொலிஸார் தெரிவித்துள்ளார்கள்.
அடுத்த கட்டத்திற்கு நகரும் ஈரான் போர்... இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட 6,500 டன் வெடிமருந்துகள் News Lankasri
லண்டனை உலுக்கிய சம்பவத்தில் புதிய திருப்பம்... தாக்குதலில் ஈடுபட்டவர் மீது கொலை முயற்சி வழக்கு News Lankasri
புதிய அமைதி பேச்சுவார்த்தையை முன்மொழிந்துள்ள ஈரான்., நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய அமீரகம் News Lankasri