யாழில் பிரபல பல்பொருள் அங்காடி மீது பெற்றோல் குண்டு தாக்குதல்
யாழ்ப்பாணம் - கல்வியங்காடு, ஆடியபாதம் வீதியில் அமைந்துள்ள பிரபல பல்பொருள் அங்காடி மீது அடையாளம் தெரியாத வாள் வெட்டு கும்பலொன்று பெற்றோல் குண்டு தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கோப்பாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்வியங்காடு ஆடியபாதம் வீதியில் அமைந்துள்ள பிரபல தனியார் பல்பொருள் அங்காடி மீதே இன்றிரவு இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இலக்கத்தகடுகள் மறைக்கப்பட்ட மோட்டார் சைக்கிளில் வந்த வாள்வெட்டு கும்பல் பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தியதோடு , அங்காடியின் கண்ணாடிகளை வாளால் அடித்து நொருக்கி சேதப்படுத்தியுள்ளதாகவுத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக பல்பொருள் அங்காடி உரிமையாளரால் கோப்பாய் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில்,சம்பவ இடத்திற்கு விரைந்த கோப்பாய் பொலிஸார் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

