வவுனியாவில் வீடு புகுந்து வாள்வெட்டு: வாளை பறித்து திருடனை வெட்டிய வீட்டு உரிமையாளர்
வவுனியா - நொச்சுமோட்டையில் வீடொன்றில் புகுந்து திருட முற்பட்ட அடையாளம் தெரியாத குழுவொன்றை, வீட்டு உரிமையாளர் அவர்களின் வாளை பறித்து பதில் தாக்குதல் நடத்திய நிலையில் திருடர்கள் தப்பி ஓடியுள்ளனர்.
அடையாளம் தெரியாத குழுவொன்று குறித்த வீட்டில் புகுந்து நேற்று (27.07.2023) இரவு அங்கிருந்த தம்பதியை வாளால் வெட்டி திருட முற்பட்ட நிலையில் வீட்டு உரிமையாளர் வாளை பறித்து திருடர்கள் மீது பதில் தாக்குதல் நடத்தியுள்ளார்.
தம்பதியினர் இருவரும் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்த நிலையில் முகமூடி அணிந்த திருடர்கள் என சந்தேகிக்கப்படுபவர்கள் வீட்டினுள் புகுந்து இருவர் மீதும் வாளால் வெட்டியுள்ளனர்.
பொலிஸார் விசாரணை
இந்நிலையில் வீட்டு உரிமையாளர் திருடர்கள் கொண்டுவந்த வாளை பறித்து அவர்கள் மீது பதில் தாக்குதல் நடத்தியுள்ளார்.
இதனால் திருடர்களில் ஒருவன் காயமடைந்த நிலையில் வீட்டில் இருந்த தொலைபேசியை எடுத்துக்கொண்டு தப்பி ஓடியுள்ளனர்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஓமந்தை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

ஆபரேஷன் சிந்தூர்... சுட்டு வீழ்த்தப்பட்ட ரஃபேல் விமானம்: உறுதி செய்த பிரெஞ்சு உளவுத்துறை News Lankasri

Super Singer: Duet Round சுற்றில் நடுவர்களை வியக்க வைத்த போட்டியாளர்கள்- இறுதி நடந்த குழப்பம் Manithan
