நல்லூர் பகுதியில் நள்ளிரவில் நடந்த வாள்வெட்டு
யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நல்லூர் பகுதியில் இன்று(16.08.2025) இரவு 5 பேர் கொண்ட குழு ஒன்றினால் ஒருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
வாள்வெட்டு காயத்துக்குள்ளான இளைஞன் சிகிச்சைகளுக்காக யாழ்ப்பாணம் போதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய ஐந்து சந்தேக நபர்கள் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகள்
இந்நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
நல்லூர் திருவிழாவின் கார்த்திகை திருவிழாவான நேற்றைய தினம் ஆலயத்திற்கு பெருமளவான பக்தர்கள் வருகை தந்திருந்தனர்.
இதன்போது, வன்முறை கும்பல் ஒன்று நல்லூர் ஆலய பின் வீதியில் அமைந்துள்ள வீதி தடைக்கு அருகாமையில் உள்ள அரசடி பகுதியில், பெருமளவான மக்கள் கூட்டத்தின் மத்தியில் இளைஞன் ஒருவர் மீது வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.
தாக்குதலில் காயமடைந்த இளைஞன், தனது உயிரை காப்பாற்றிக்கொள்ள வீதி தடையை தாண்டி நல்லூர் ஆலய சூழலை நோக்கி தப்பியோடிய போதும், தாக்குதலாளிகள் வாளுடன் இளைஞனை துரத்தி சென்று தாக்குதல் நடாத்த முற்பட்ட நிலையில் ஆலய சூழலில் பாதுகாப்பு கடமையில் நின்ற பொலிஸார் விரைந்து செயற்பாட்டு தாக்குதலாளிகளில் ஐவரை கைது செய்துள்ளனர்.
அதேவேளை தாக்குதலில் காயமடைந்த இளைஞனை மீட்டு, நோயாளர் காவு வண்டியில், யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர். நல்லூர் ஆலய திருவிழா நடைபெற்று வரும் நிலையில் ஆலய சூழலில் 600க்கும் மேற்பட்ட பொலிஸார் சிவில் மற்றும் சீருடைகளில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், வன்முறை கும்பல் ஆலய சூழலில் வாள் வெட்டு தாக்குதலில் துணிந்து ஈடுபட்டமை ஆலயத்திற்கு வந்த பக்தர்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி இருந்தன.
அதேவேளை ஆலய சூழலில் மாத்திரமே பொலிஸாரின் கண்காணிப்பு தீவிரமாக உள்ள நிலையில், நல்லூர் பின் வீதியில் உள்ள திருவிழா கால கடை தெருக்களில், வன்முறை கும்பல்கள், மாவா உள்ளிட்ட போதைப்பொருட்களை பாவிக்கும் போதைப்பொருள் பாவனையாளர்கள் கடைத்தெருவுக்கு வரும் பெண்களுக்கு இடையூறு ஏற்படுத்தி வருவதும் அதிகரித்துள்ளதாகவும், அது தொடர்பிலும் பொலிஸார் கவனம் செலுத்த வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |


நல்லூர் கந்தசுவாமி கோவில் சந்தான கோபாலர் உற்சவம் & பட்டித்திருவிழா





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 3 நாட்கள் முன்

15 வயதில் திருமணம், கணவர் இல்ல, மகன்களை வளர்க்க இத செய்தேன்.. பாக்கியலட்சுமி செல்வி எமோஷனல் Manithan

Viral Video: பாம்புகள் கூட்டமாக ஓய்வெடுப்பதை பார்த்ததுண்டா? 7 மில்லியன் பேரை புல்லரிக்க வைத்த காட்சி Manithan

ஓவர்சீஸில் தாறுமாறு வசூல் வேட்டை செய்துள்ள நடிகர் ரஜினியின் கூலி... அதிகாரப்பூர்வமாக வந்த தகவல் Cineulagam

உக்ரைனில் பொதுமக்கள் கொல்லப்படுவதை நிறுத்துவது எப்போது? பத்திரிகையாளர் கேள்விக்கு புடினின் செய்கை News Lankasri
