மட்டக்களப்பில் வாள்வெட்டு தாக்குதல்! - 7 பேர் படுகாயம்
மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள ஜெயந்திபுரத்தில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் பெண் ஒருவர் உட்பட 7 பேர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு இடம்பெற்றுள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த பிரதேசத்திலுள்ள சேர்ந்த பெண் ஒருவரை இளைஞர் ஒருவர் ஒருதலையாக காதலித்து வந்துள்ளதாகவும், தொடர்ந்து குறித்த பெண்ணை பின் தொடர்ந்து தொந்தறவு கொடுத்து வந்துள்ளதாகவும் இதனையடுத்து இருவரது உறவினருக்கிடையே இரண்டுதடவைகள் கைகலப்புக்கள் இடம்பெற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டு விசாரணையின் பின்னர் இருபக்கமும் சமாதானமாக சென்றனர்.
இந்த நிலையில் சம்பவதினமான நேற்று இரவு 7 மணியளவில் ஜெயந்திபுரத்தில் வீதியில் வைத்து குறித்த பெண்ணின் உறவினர் மீது இளைஞனின் குழுவினர் வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்டதையடுத்து 7 பேர் படுகாயமடைந்தனர்.
இதனையடுத்து அந்த பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டதுடன், வாள்வெட்டு தாக்குதலை மேற்கொண்ட குழுவினர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர் என பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இத்தாக்குதலில் படுகாயமடைந்தவர்கள் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தாக்குதலை மேற்கொண்ட குழுவினரை கைது செய்வதற்கான நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு
வருகின்றனர்.
இலங்கைத் தமிழ் ரொம்ப பிடிக்கும் -சிட்னியில் ரசிகர்களை கவர்ந்த த்ரிஷா... விஜய் குறித்து ரசிகர் எழுப்பிய கேள்வி! Manithan
உலகக் கோப்பையில் மெஸ்ஸியுடன் நடந்த மோதல்: இங்கிலாந்து வீரர் ஜூட் பெல்லிங்ஹாம் விளக்கம் News Lankasri
பிரித்தானியாவின் புதிய பிரதமராகும் ஆன்டி பர்னாம்: அவரது குடும்பம் குறித்து சில தகவல்கள் News Lankasri