சுவிட்சர்லாந்திலிருந்து இலங்கைக்கு வருகை தந்துள்ள நிவாரண விமானம்
இலங்கையில் டிட்வா புயலால் கடுமையான தாக்கம் ஏற்ட்டதை தொடர்ந்து, சுவிட்சர்லாந்து, இலங்கைக்கு நிபுணர்கள் மற்றும் உதவிப் பொருட்களை அனுப்பியுள்ளது.
அதன்படி, நீர் மற்றும் சுகாதாரத்தை வழங்குவதற்காக சுவிஸ் மனிதாபிமான உதவிப் பிரிவின் ஒரு குழு தற்போது களத்தில் இறங்கியுள்ளது.
பாரிய வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளைக் கருத்தில் கொண்டு, இலங்கை சர்வதேச உதவிக்கான வேண்டுகோளை விடுத்துள்ளதாக சுவிஸ் வெளியுறவு அமைச்சு அறிவித்துள்ளது.
சர்வதேச உதவி
இதையடுத்து, ஆறு பேர் கொண்ட சுவிஸ் மீட்புக் குழு அனுப்பப்பட்டுள்ளது. அதில் நீர், மற்றும் சுகாதாரம் ஆகியவற்றில் நிபுணர்கள் உள்ளனர்.

சுவிஸ் வளர்ச்சி மற்றும் ஒத்துழைப்புக்கான முகமையின் (SDC) இந்தியாவை தளமாகக் கொண்ட பேரிடர் அபாயக் குறைப்பு நிபுணரும் இலங்கைக்கு பயணம் செய்வார்.
10,000 பேருக்கு வழங்குவதற்காக SDC குடிநீர் தொகுதிகளையும் வழங்குகிறது. தெற்கு மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் பல நாடுகளில் பல வாரங்களாக பெரும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் கடுமையான சேதத்தை ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக இலங்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் நூற்றுக்கணக்கான விமான சேவைகள் ரத்து... லட்சக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேற்றம் News Lankasri
இந்த வார சண்டே எல்லா தொலைக்காட்சியிலும் விஜய் பட ஸ்பெஷல் தான்... என்னென்ன படங்கள் பாருங்க... Cineulagam
சவுதி மீது உக்கிரத் தாக்குதலை கட்டவிழ்த்த ஹவுதிகள்... முதல்முறையாக ட்ரம்ப் எடுத்த முடிவு News Lankasri