உக்ரைனுடன் கைகோர்க்க தயாராகும் மற்றுமொரு ஐரோப்பிய நாடு!
சுவிட்ஸர்லாந்தின் (Switzerland) ஜனாதிபதி கரின் கெல்லர்-சுட்டர், உக்ரைனின் (Ukraine) நெருக்கடிகளை தீர்ப்பதில் மத்தியஸ்தராகச் செயல்படத் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் (X) தளத்தில் இட்டுள்ள பதிவிலேயே குறிப்பிட்டுள்ளார்.
தொலைபேசி அழைப்பு
மேலும், "உக்ரேனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கியுடன் மேற்கொண்ட தொலைபேசி அழைப்பின் போது, சுவிட்ஸர்லாந்தின் தொடர்ச்சியான ஆதரவைப் பற்றி நான் அவருக்கு உறுதியளித்தேன்.
உக்ரைனின் தற்போதைய நிலைமையின் தீர்வுக்கு மத்தியஸ்தராக செயல்பட சுவிட்சர்லாந்து தயாராக உள்ளது.
குறிப்பாக நமது பல நீண்டகால மனிதாபிமான மற்றும் புனரமைப்புத் திட்டங்கள் மற்றும் சுவிட்சர்லாந்தின் உத்தியோகபூர்வ நடவடிக்கைகள் மூலம் அமைதி செயல்முறைக்கு பங்களிக்க நாங்கள் தயாராக உள்ளோம்” என குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |