இலங்கையில் வேப்ப மரத்தில் அருவியாக கொட்டும் பால் - வியப்பில் குவியும் மக்கள்
கந்தளாய், டோசர் வீதியில் அமைந்துள்ள வீடொன்றின் தோட்டத்தில் உள்ள வேப்ப மரத்தில் இருந்து பால் திரவம் போன்று வெளியே ஆரம்பித்துள்ளது.
கடந்த 9ஆம் திகதி முதல் இந்த திரவம் வெளியேற ஆரம்பித்துள்ளதை பார்வையிட காண ஏராளமானோர் குவித்து வருகின்றர்.
அஜித் பிரேமசிறி என்பவரின் தோட்டத்தில் உள்ள வேப்ப மரத்தில் இருந்து வரும் இந்த திரவம், இனிப்பான சுவை கொண்டதாகும்.
அங்கு வரும் அனைவரும் மிகவும் சுவையாக உள்ளதாக பருகி வருகின்றனர்.
வெள்ளை நிற திரவம்
புதிய வீடு கட்டுவதற்கான அடித்தளத்தை வெட்டத் தொடங்கிய அன்று, கிளைகளை அகற்றும் போது குறித்த மரத்தில் இருந்து வெள்ளை நிற திரவம் வெளியேறியதாக வீட்டின் உரிமையாளராக அஜித் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இந்த மாற்றம் தனக்கு அதிர்ஷ்டவசமாக நடக்கின்றதா அல்லது துரதிர்ஷ்டவசமாக நடக்கின்றதா என்ற கேள்வி எனக்குள் உள்ளது என அஜித் பிரேமசிறி தெரிவித்துள்ளார்.
விஞ்ஞான ரீதியாக வேப்ப மரத்தில் இவ்வாறான திரவம் வெளியேறுவது இயற்கையான ஒன்றாகும். எனினும் கசப்பு தன்மையை கொண்ட வேப்ப மரத்தில் இனிப்பான திரவம் வெளியேறுவது மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.