இலங்கைக்கு வந்த ஐரோப்பிய பெண்ணுக்கு வைத்தியசாலையில் காத்திருந்த அதிர்ச்சி
காலியிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்ற சுவீடன் பெண்ணின் அந்தரங்க உறுப்புகள் ஸ்கேன் செய்யப்பட்டதாக முறைப்பாடு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
32 வயதான சுவீடன் பெண் ஒருவர் தனது விலா எலும்பில் ஏற்பட்ட மருத்துவ சிகிச்சைக்காக காலி பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார்.
குறித்த பெண்ணை பரிசோதித்த மருத்துவர் அவருக்கு பல பரிசோதனைகளை பரிந்துரைத்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இரத்த பரிசோதனை
எக்ஸ்ரே, இரத்த பரிசோதனை மற்றும் அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் பரிந்துரைக்கப்பட்டதாக பொலிஸாரிடம் குறித்த பெண் குறிப்பிட்டுள்ளார்.

இதன் போது அனுமதியின்றி தனது அந்தரங்க உறுப்புகளும் ஸ்கேன் செய்யப்பட்டதாகவும், தனக்கு எந்த அறிக்கையும் வழங்கப்படவில்லை என்றும் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் காலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வளைகுடாப் போரில் அமெரிக்க அரசியலமைப்பின் தாக்கம்..! 16 மணி நேரம் முன்
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பான கதைக்களத்திற்கு இடையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து வந்த போட்டோ... Cineulagam