நேட்டோவுடன் கைகோர்த்தது சுவீடன்
நேட்டோ அமைப்பில் 32 ஆவது அங்கத்துவ நாடாக சுவீடன் உத்தியோகபூர்வமாக இணைந்து கொண்டது.
நீண்டகாலம் அணிசேரா நாடாக விளங்கிய சுவீடன், உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பின் பின்னர், நேட்டோவில் இணைவதற்கு விண்ணப்பித்திருந்தது.
எனினும், நேட்டோவில் சுவீடன் இணைவதற்கான சம்மதத்தை தெரிவிப்பதற்கு துருக்கியும், ஹங்கேரியும் தயங்கிவந்தன.
சுதந்திரத்துக்கான ஒரு வெற்றி
இதன் பின்னர் இவ்விரு நாடுகளும் தமது சம்மத்தை தெரிவித்த நிலையில், நேட்டோவில் சுவீடன் இணைந்துகொண்டுள்ளது.
மேலும், நேட்டோவில் சுவீடன் இணைந்ததை வரவேற்றுள்ள அந்நாட்டு பிரதமர் ஊல்வ் கிறிஸ்டேர்சன், இது சுதந்திரத்துக்கான ஒரு வெற்றி என கூறியுள்ளார்.
Sweden has now joined NATO and will be covered by the collective defence obligations set out under Article 5 of the North Atlantic Treaty.
— Sweden (@Sweden) March 8, 2024
More about what the NATO membership means for Sweden at https://t.co/KfxSAGXige.
Archive photo (October 2023): Jonas Ekströmer/TT pic.twitter.com/75SlBqo0MC
2022 ஆம் ஆண்டு உக்ரைன் மீது ரஷ்யா யாருமே எதிர்பார்க்காத வகையில் போரை ஆரம்பித்த நிலையில், இது பல ஐரோப்பிய நாடுகளுக்கும் அச்சத்தை ஏற்படுத்தியது.
தங்கள் மீதும் ரஷ்யா இதேபோல தாக்குதலை நடத்துமோ என ஐரோப்பிய நாடுகள் அஞ்சின
இதன் காரணமாகவே சுவீடன் நேட்டோ அமைப்பில் இணைய முடிவு செய்தமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |