வவுனியாவில் வீடொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட இளைஞன்
வவுனியா(Vavuniya) மகாறம்பைக்குளம் தாஸ்நகர் பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட இளைஞனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக மரண விசாரணை அதிகாரி மற்றும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை மாலை தாஸ்நகர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் தவறான முடிவை எடுத்த நிலையில் அயலவர்களால் மீட்கப்பட்டிருந்தார்.
மேலதிக விசாரணைகள்
இந்நிலையில் உடனடியாக வைத்தியசாலைக்கு அனுப்பிவைக்கப்பட்ட அவர் அங்கு காெண்டு செல்லும் முன்னரே மரணமடைந்துள்ளதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக பொலிஸாருக்கு தெரியப்படுத்தப்பட்ட நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த இளைஞனின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக மரண விசாரணை அதிகாரி மற்றும் பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இதனையடுத்து சடலத்தை பார்வையிட்ட நீதவான் அதனை உடற்கூற்று பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.

சடலம் வவுனியா வைத்தியசாலையின் பிணஅறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் நாளையதினம் (05.08.2024) உடற்கூற்று பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது அதே பகுதியை சேர்ந்த கோபி (வயது 26) என்ற இளம் குடும்பஸ்தரே மரணமடைந்தவராவார். சம்பவம் தொடர்பாக வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
ரோஹினியை பழிவாங்க படிச்ச அறிவாளி மனோஜ் போட்ட பிளான், சிக்குவாரா?... சிறகடிக்க ஆசை சீரியல் Cineulagam
முகம் மெலிந்த நிலையில் மனைவியுடன் வெனிசுலா ஜனாதிபதி மதுரோ: நியூயார்க்கில் நடந்த விசாரணை News Lankasri
அய்யனார் துணை சீரியலில் அடுத்து நடக்கப்போகும் ஸ்பெஷல் கொண்டாட்டம்... படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam
ரயில் நிலையத்தில் படுத்துறங்கிய லாரி ஓட்டுநர் மகன் - RCB அணியின் நம்பிக்கை நட்சத்திரம் News Lankasri
30 ஆண்டுகள் கழித்து உருவாகும் திரிகிரக யோகம்: ஏப்ரலில் இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan