ஈஸ்டர் தாக்குதல் குறித்து கர்தினால் மெல்கம் ரஞ்சித்திற்கு ஏற்பட்டுள்ள சந்தேகம்?
உயிர்த்த ஞாயிறு தற்கொலைத் தாக்குதல் சம்பவம் தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது என கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் குறித்து மெய்நிகர் தொழில்நுட்பத்தின் ஊடாக வெளிநாடு வாழ் இலங்கையர்களுடன் நடைபெற்ற கருத்தரங்கில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் இந்த தாக்குதல் இடம்பெறுவதனை தவிர்க்காதிருந்தனரா என்ற சந்தேகம் எழுவதாகத் தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்தும் கூறுகையில்,
சஹ்ரானை கைது செய்ய பிடிவிராந்து பெற்றுக்கொண்டிருந்த வேளையில் பிரதிப்பொலிஸ் மா அதிபர் நாலக்க டி சில்வா கைது செய்யப்படுகின்றார்.
ஜனாதிபதி தேர்தலை இலக்கு வைத்து நாட்டில் அச்சத்துடன் கூடிய சூழ்நிலையை உருவாக்குவதற்காக புலனாய்வுத் தகவல்களின் அடிப்படையில் செயற்படவில்லையா என்பது குறித்து விசாரணை நடாத்தப்பட வேண்டுமென நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முஸ்லிம் கடும்போக்காளர்கள் இந்த தாக்குதலை ஆயத்தப்படுத்தினர் என்பது உண்மை. எனினும் இந்த தாக்குதல் பற்றிய தகவல்கள் தெரிந்திருந்தும் ஜனாதிபதி தேர்தலுக்காக இந்த விடயம் பற்றிய தகவல்கள் மூடி மறைக்கப்பட்டதா?
மக்களின் வாக்குளுக்காக இந்த தாக்குதல் இடம்பெற செய்யப்பட்டதா? தாக்குதல் தொடர்பில் 60 வீதமான பொறுப்பு அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகளின் கைகளில் உள்ளது.
ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் தாக்குல் குறித்த விசாரணைகளை மூடி மறைக்கவே முயற்சிக்கின்றனர்.
விசாரணைகள் மூலம் தகவல்களை வெளிக்கொணர அவர்கள் விரும்புவதில்லை என கர்தினல் கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 6 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
