யாழ். போதனா வைத்தியசாலையில் முக்கிய சத்திரசிகிச்சை பிரிவின் செயற்பாடுகள் தற்காலிக நிறுத்தம்
யாழ். போதனா வைத்தியசாலையின் கண் சத்திரசிகிச்சை பிரிவின் செயற்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாகப் பதில் பணிப்பாளர் மு.நந்தகுமார் தெரிவித்துள்ளார்.
கண் சத்திர சிகிச்சைகள் நிறுத்தப்பட்டமை தொடர்பாகக் கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினால் மருந்துகளுக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது.
அதனடிப்படையில் கண் சத்திரசிகிச்சைக்கு தேவையான மருந்துகள் இல்லாமையினால் அந்த பிரிவு தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
மேலும் சில மருந்துப் பொருட்கள் குறைந்தளவிலேயே உள்ளது.
ஆகையினால் மருந்துப்பொருட்களை பெற்றுக் கொள்வதற்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.





சகோதரி பவதாரணி பாடலை பாடிய போட்டியாளர், எமோஷ்னல் ஆன யுவன், வெங்கட் பிரபு.. சூப்பர் சிங்கர் 11 புரொமோ Cineulagam

இஸ்ரேலுக்கு ஆயுத ஏற்றுமதியை முழுமையாக நிறுத்திய ஜேர்மனி - அரசியல் மாற்றத்திற்கு அடையாளம் News Lankasri

தர்ஷன் திருமணத்திற்கு முன் அநியாயமாக போன ஒரு உயிர், பரபரப்பின் உச்சம்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
