யாழில் வர்த்தக நிலையத்தை கொள்ளையிட்ட சந்தேகநபர்கள் கைது
யாழ்ப்பாணம் அச்சுவேலி - புத்தூர் பகுதியில் வர்த்தக நிலையத்தை உடைத்து அங்கிருந்த பொருட்களை கொள்ளையடித்து சென்ற சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்த கைது சம்பவம் நேற்றையதினம் (12.12.2023) இடம்பெற்றுள்ளது.
கடந்த டிசம்பர் 10ம் திகதி புத்தூர் பகுதியில் உள்ள வர்த்தக நிலையம் உடைக்கப்பட்டு சிசிடிவி கமரா, தொலைக்காட்சி பெட்டி, சிகரெட் பெட்டிகள், தொலைபேசி மீள்நிரப்பு அட்டைகள் என பல பொருட்கள் கொள்ளையிடப்பட்டதாக உரிமையாளரால் அச்சுவேலி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருந்து.

ஆபத்தான பொருட்கள் மீட்பு
இதனையடுத்து பொலிஸார் முன்னெடுத்திருந்த விசாரணையில் புத்தூர் கலைமதி பகுதியைச் சேர்ந்த 20 - 30 வயதுக்குட்பட்ட மூவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்களிடம் இருந்து கொள்ளையடித்த சில பொருட்களும் ஆபத்தை விளைவிக்கும் வகையில் இருந்த வாளும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அதன்படி சந்தேகநபர்களை இன்றையதினம் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam