கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான அம்பருடன் சிக்கிய நபர்கள்
இலங்கையை சூழவுள்ள ஆழ்கடலில் வாழும் திமிங்கலங்களில் இருந்து பெறப்பட்ட அம்பர் எனப்படும் திமிங்கலத்தின் ஒரு தொகை வாந்தி கைப்பற்றப்பட்டுள்ளது.
இதனை 50 மில்லியன் ரூபாவுக்கு விற்பனை செய்ய முயன்ற சந்தேக நபர்கள் எல்பிட்டிய பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
வளன மத்திய ஊழல் தடுப்பு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அம்பர் மீட்பு
இந்த மோசடிக்கு தலைமை தாங்கிய இரண்டு பிரதான சந்தேக நபர்களையும் மேலும் மூன்று சந்தேக நபர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபர்களிடம் இருந்து 17 கிலோ 234 கிராம் அம்பர் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக பிட்டிகல பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 14 மணி நேரம் முன்

பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு... செயல்பாடுகளை நிறுத்தும் பெரும் தொழில்நுட்ப நிறுவனம் News Lankasri

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri
