யாழில் தங்கச் சங்கிலியை அறுத்த சந்தேகநபர் கைது
சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பலாலி வீதி, புன்னாலை கட்டுவன் பகுதியில் பெண் ஒருவரது தங்கச் சங்கிலியை அறுத்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கையானது இன்றையதினம்(19) மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருகையில், நேற்றையதினம் குறித்த பெண் அந்த வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்தார்.
முறைப்பாடு
இதன்போது மோட்டார் சைக்கிளில் வந்த குறித்த சந்தேகநபர் அந்த பெண்ணின் சங்கிலியை அறுத்து சென்றுள்ளார்.

இந்நிலையில் இது குறித்து சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.
விசாரணைகளின் அடிப்படையில், சம்பவம் இடம்பெற்று 24 மணிநேரத்துக்குள் அளவெட்டி பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர் ஒருவரை சுன்னாகம் பொலிஸார் கைது செய்தனர்.
கைது
குறித்த கொள்ளை சம்பவத்திற்கு அவர் பயன்படுத்திய மோட்டார் சைக்கிள் மீட்கப்பட்டுள்ளது.

அத்தோடு, நபர் அறுத்த சங்கிலியை அடகு வைத்துள்ள விடயம் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
மேலும், அவரை மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ட்ரம்பிற்கு அடுத்த பேரிடியை இறக்கிய ஈரான்... ஹார்முஸ் நீரிணை விவகாரத்தில் புதிய திருப்பம் News Lankasri
புதிய கம்பெனிக்கு பார்ட்னர் ஆன நிலா, ரூ. 5 லட்சம் ரெடியானதா, ஹேப்பி எபிசோட்... அய்யனார் துணை சீரியல் Cineulagam
கோமதிக்காக குடும்பத்தை ஏமாற்றும் காந்திமதி, வெடிக்கப்போகும் பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam