உள்ளூர் துப்பாக்கியுடன் சந்தேக நபரொருவர் கைது
திருகோணமலை- மூதூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபருவரை நேற்றிரவு (02) கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மூதூர் பொலிஸ் நிலையத்திற்கு வழங்கப்பட்ட இரகசிய தகவலை அடுத்து குறித்த இளைஞர் வயலில் காவல் பார்த்துக் கொண்டிருக்கும் போது அவர் தங்கியிருந்த குடிசையை சோதனையிட்டபோது அவரிடமிருந்து துப்பாக்கி மீட்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர் தோப்பூர்- பட்டித்திடல் பகுதியைச் சேர்ந்த விநாயகமூர்த்தி பாஸ்கரன் (33வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபரை மூதூர் நீதிமன்றில் இன்றைய தினம் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும்
மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.
என்னை கடத்திட்டு போயிட்டாங்க.. ஜேசன் சஞ்சய் வீடியோ வைரல்! என்ன சொல்லி இருக்கிறார் பாருங்க Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam