தெற்கு அதிவேக வீதியிலிருந்து போதைப்பொருள் விநியோகம்! வெளியான பல அதிர்ச்சி தகவல்
ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் வெலிப்பன்ன பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது
கைதான சந்தேகநபர், இந்த ஐஸ் போதைப்பொருளை அளுத்கம, வெலிப்பன்ன, மத்துகம, லெவ்வந்துவ பிரதேசங்களுக்கும், வெலிப்பன்ன தெற்கு அதிவேக வீதியிலிருந்து பல்வேறு தரப்பினருக்கு விநியோகிப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

மேல் மாகாண புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் பேரில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் போது, தற்போது வெளிநாட்டில் மறைந்திருக்கும் அஹுங்கல்ல சஞ்சீவவிடம் இருந்து இந்த ஐஸ் போதைப்பொருளை பெறுவதாக தெரிவித்துள்ளார்.
நீதிமன்றில் முன்னிலை
விசேட பொலிஸ் குழுவொன்று வெலிபன்ன-வலகெதர பன்சல வீதி பகுதியில் உள்ள வீட்டின் அறை ஒன்றில் ஐஸ் போதைப்பொருளை பொதி செய்துக்கொண்டிருந்த போது,நேற்று (02) மாலை சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.

கைதான சந்தேகநபரிடம் இருந்து கிட்டத்தட்ட 1 கோடியே 44 இலட்சம் ரூபா பெறுமதியான 900 கிராம் ஐஸ் போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
சந்தேகநபர் வெலிபன்ன வலகெதர பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவராவார்.
மேலும் சந்தேகநபர் இன்று (03) மத்துகம நீதவான் நீதிமன்றில் முன்னிலைபடுத்தப்படவுள்ளார்.
புலம்பெயர்ந்தோருக்கு வேலை கிடையாது... பிள்ளைகளுக்கு பள்ளிகளில் இடம் கிடையாது: ஒரு திடுக் செய்தி News Lankasri
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
சக்தியை கண்டுபிடிக்க போராடும் ஜனனி.. பார்கவியை வீட்டை விட்டு துரத்தும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் புரோமோ வீடியோ Cineulagam
Bigg Boss: கொடுத்த வேலையை பார்க்க வக்கில்ல.... நான் உங்ககிட்ட பேசலை! திவ்யாவை கிளித்தெடுத்த விஜய்சேதுபதி Manithan