ஓய்வுபெற்ற இராணுவச் சிப்பாயைக் கடத்தி காணாமல் போகச் செய்த சம்பவம் - சந்தேக நபர் கைது
ஓய்வுபெற்ற இராணுவச்சிப்பாய் ஒருவரைக் கடத்தி காணாமல் போகச் செய்த சம்பவத்துடன் தொடர்புடைய நபரொருவரை குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
நிட்டம்புவ, ரண்பொகுணுகம பிரதேசத்தில் நேற்றைய தினம் (08) குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மனிதப்படுகொலைகள்
கிரிந்திவெல, நாரங்கஸ்பிடிய பிரதேசத்தில் வசித்த ஓய்வுபெற்ற இராணுவச் சிப்பாய் ஒருவர் கடந்த 2018ஆம் ஆண்டின் 09ஆம் மாதம் 09ஆம் திகதி கடத்திச் செல்லப்பட்டு காணாமல் போகச் செய்யப்பட்டிருந்தார்.

சம்பவம் தொடர்பில் நீண்ட காலமாக விசாரணைகளை மேற்கொண்டு வந்த குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் மனிதப்படுகொலைகள் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள், சம்பவம் தொடர்பில் நேற்றைய தினம் சந்தேக நபரொருவரைக் கைது செய்துள்ளனர்.
ரண்பொகுணுகம பிரதேசத்தில் வசித்து வந்த 47 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபரிடமிருந்து பேனை வடிவ துப்பாக்கியொன்றும் அதற்கான 05 தோட்டாக்கள், டீ-56 ரக துப்பாக்கித் தோட்டாககள் 04, 9மிமீ கைத்துப்பாக்கிக்கான தோட்டாக்கள் 02 உள்ளிட்ட தோட்டாக்கள் ஒரு தொகையும் கைப்பற்றப்பட்டுள்ளது.
முதல்வர் விஜயை குடும்பத்துடன் சந்தித்த நடிகை சினேகா! வெளியிட்டுள்ள உணர்வுபூர்வ பதிவு வைரல்! Manithan