கிளிநொச்சியில் திருட்டுடன் தொடர்புடையவர் இராணுவத்தினரின் உதவியுடன் மடக்கி பிடித்த மக்கள்!
கிளிநொச்சியில் திருட்டுடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவரை இராணுவத்தினரின் உதவியுடன் பொதுமக்கள் மடக்கி பிடித்துள்ளனர்.
கிளிநொச்சி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மலையாளபுரம் பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வீதியால் பயணித்துக் கொண்டிருந்த பெண் ஒருவரிடம் சந்தேக நபரும் மற்றொரு நபரும் தொலைபேசியை கேட்டு உதவி கோரியுள்ளனர்.
மோட்டார் சைக்கிள்
தமது மோட்டார் சைக்கிளில் எரிபொருள் தீர்ந்துவிட்டதாகவும் நண்பர்களின் உதவியை கோர தொலைபேசியை கோரியுள்ளனர்.
இந்த நிலையில் குறித்த பெண் உதவ முன்வந்தபோது அப்பெண்ணின் கைப்பையை பறிக்க முற்பட்டுள்ளனர்.
இதற்கமைய உதவி கோரி அந்த பெண் சத்தமிட்டுள்ளார்.
இராணுவ முகாம்
இதன்படி சம்பவம் இடம்பெற்ற இடத்திற்கு அருகில் இராணுவ முகாம் இருந்த நிலையில், அங்கு படையினர் சென்று அப்பெண்ணிற்கு உதவ முயன்றுள்ளனர்.

எனினும், அதில் ஒரு சந்தேக நபர் குறித்த பெண்ணின் தங்க சங்கிலியை அறுத்துத் தப்பி சென்றுள்ளதாக அப்பெண் பொலிஸ் முறைப்பாடு செய்துள்ளார்.
மேலும், மற்றய சந்தேக நபரை இராணுவத்தினர் கைது செய்து பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், உடனடியாக அப்பகுதியில் மின்விளக்கொன்றை அமைக்க நடவடிக்கை எடுப்பதாக குறித்த இராணுவ முகாமின் பொறுப்பு நிலை அதிகாரி இதன்போது தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
விருந்தில் ஏற்பட்ட சண்டை.. வெளிவந்த உண்மையால் கோபத்தில் பாண்டியன்.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரோமோ வீடியோ Cineulagam