பொலிஸ் மற்றும் இராணுவத்தை அச்சுறுத்திய சந்தேக நபர் கைது!
பொலிஸாரையும் இராணுவத்தினரையும் தாக்கி கொல்ல வேண்டும் என சமூக வலைத்தளங்களில் கருத்து வெளியிட்ட ஒருவரை நாகொட பொலிஸார் இன்று (06) கைது செய்துள்ளனர்.
சந்தேக நபர் நாகொட தலாவ பிரதேசத்தை சேர்ந்த 36 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேக நபர் பத்தேகம நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு எதிர்வரும் 18ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஆறு வருடங்களாக போதைப்பொருளுக்கு அடிமையாகி மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சந்தேக நபர் பல தடவைகள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த சந்தர்ப்பங்களில் வைத்தியசாலையில் இருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
நாகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





Ethirneechal: எங்க காதல சேர்த்து வை.. வெறிக் கொண்டு சீறிய சக்தி- திருமணத்தில் புது திருப்பம் Manithan
