பிரபல ஹோட்டல் அறையில் வெளிநாட்டு பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி: ஒருவர் கைது
கோட்டை பொலிஸ் பிரிவில் பிரபல ஹோட்டல் அறையில் தங்கியிருந்த வெளிநாட்டு பெண்ணின் பணப்பையை திருடிய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு நேற்று (13) கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டின் பேரில் உடனடியாக செயல்பட்ட பொலிஸ் அதிகாரிகள் சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.
நீதிமன்றத்தில் முன்னிலை
வெளிநாட்டுப்பெண் ஹோட்டலில் உள்ள சிறப்பு விருந்தினர் அறையில் மற்றொரு பெண்ணுடன் தங்கியிருந்ததாகவும், அவரது பணப்பையில் இருந்த திர்ஹாம்கள் மற்றும் யூரோக்கள் (உள்ளூர் நாணயத்தில் 330,000 ரூபாய்) காணாமல்போயுள்ளதாகவும் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் 41 வயதான கந்தானையை சேர்ந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரிடம் விசாரித்தபோது, வெளிநாட்டுப் பெண்கள் அறையில் இல்லாதபோது திருட்டு நடந்ததாகவும், திருடப்பட்ட வெளிநாட்டுப் பணம் ஜா-எல பகுதியில் உள்ள நிதி நிறுவனத்தில் மாற்றப்பட்டமையும் தெரியவந்துள்ளது.
மேலும்,கைது செய்யப்பட்ட சந்தேகநபரை இன்று (14) கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தபொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |