மட்டக்களப்பில் விசாரணைக்கு வந்த பொலிஸார் மீது தாக்குதல்:சந்தேகநபர் கைது(Photo)
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆரையம்பதி பிரதேசத்தில் பொலிஸார் மீது தாக்கிவிட்டு தப்பி ஓடிய நபரை நேற்று (19-03-2023) கைக்குண்டு ஒன்றுடன் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த தாக்குதலில் படுகாயமடைந்த நிலையில் இரு பொலிஸார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன் அங்கிருந்து ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தப்பியோடிய சந்தேக நபர் கைது
ஆரையம்பதி கிழக்கு பிரதேசத்தில் இருந்து சம்பவதினமான நேற்று காலை பொலிஸாரின் 119 அவசரசேவை பிரிவுக்கு தன்னை தனது கணவர் அடித்து துன்புறுத்துவதாக தொலைபேசி அழைப்பு விடுக்கப்பட்டது.
பின்னர் அந்த வீட்டிற்கு இரு பொலிஸார் வாகனத்தில் விசாரணைக்காக சென்றபோது அங்கு இருந்த வீட்டின் உரிமையாளர் பொலிஸார் மீது தாக்குதலை மேற்கொண்டதையடுத்து அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.
இந்த நிலையில் தாக்குதலை மேற்கொண்டுவிட்டு தப்பி ஓடியவரை நேற்று இரவு கைக்குண்டு ஒன்றுடன் கைது செய்துள்ளதாகவும் அவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த
நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

சரிகமப Li'l Champs சீசன் 4 திவினேஷ் ஆசையை நிறைவேற்றிய பாடகர் ஸ்ரீநிவாஸ்.. சந்தோஷத்தில் குடும்பம் Cineulagam

போர் நிறுத்தம் அறிவித்ததால் வெளியுறவு செயலாளர் குடும்பத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் News Lankasri

புதிய ஒப்பந்தம்... ஐரோப்பிய துருப்புகளுடன் ரஷ்யாவை எதிர்த்து களமிறங்கும் பிரித்தானியப் படைகள் News Lankasri
