போயா தினத்தில் பொலிஸாரிடம் வசமாக சிக்கிய நபர்
போயா தினத்தில் ஏறாவூரில் இருந்து மட்டக்களப்பிற்கு முச்சக்கரவண்டியில் சூட்சகமாக மறைத்து வைத்து கசிப்பு கடத்திய ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபரை ஏறாவூர் சவுக்கடி பகுதியில் வைத்து நேற்று (05) மாலை கிழக்கு மாகாண குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அவரிடமிருந்து 20 லீற்றர் கசிப்பை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சூட்சகமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த போத்தல்
வீதி கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த பொலிஸார் சந்தேகநபர் செலுத்தி சென்ற முச்சக்கரவண்டியை நிறுத்தி சோதனையிட்ட போது ஒலிவாங்கி பெட்டிக்குள் சூட்சகமாக மறைத்து வைக்கப்பட்டிருந்த 20 போத்தல் கசிப்பை மீட்டுள்ளனர்.

இதனையடுத்து முச்சக்கரவண்டி சாரதியை கைது செய்துள்ளதுடன் அவரை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கையை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |