மஸ்கெலியாவில் சட்டவிரோத மதுபான தயாரிப்பு - வசமாக சிக்கிய சந்தேகநபர்
மஸ்கெலியா - ஸ்டர்ஸ்பி தோட்டத்திற்கு மேல்பகுதியில் அமைந்துள்ள சமனல இயற்கை சரணாலயத்தில் கால்வாய் அருகே சட்டவிரோதமாக மதுபானம் தயாரித்துக் கொண்டிருந்த ஒரு சந்தேகநபர் உபகரணங்களுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
மஸ்கெலியா பொலிஸ் பிரிவின் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், புலனாய்வு அதிகாரிகள் மற்றும் மஸ்கெலியா பொலிஸ் நிலைய அதிகாரிகள் அடங்கிய குழு, குறித்த வனப்பகுதிக்குள் நுழைந்து, ஒன்றரை நாட்கள் அங்கேயே தங்கி கண்காணிப்பில் ஈடுபட்டு, சட்டவிரோதமாக இயங்கி வந்த மதுபான தயாரிப்பு இடத்தை முற்றுகையிட்டுள்ளனர்.
சந்தேகநபர் கைது
இதன்போது, 210 லீட்டர் கசிப்பு அழிக்கப்பட்டதுடன், சந்தேகநபரால் தயாரிக்கப்பட்ட 1500 மில்லிலீட்டர் ஸ்பிரிட் மற்றும் சட்டவிரோத மதுபானம் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட பல உபகரணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர், குறித்த தோட்டத்திலேயே வசிக்கும் 69 வயதுடைய நபர் எனத் தெரியவருகிறது.
அவரை பொலிஸ் பிணையில் விடுவித்து, அவருக்கு எதிராக ஹட்டன் நீதவான் நீதிமன்றத்தில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மஸ்கெலியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 15 மணி நேரம் முன்
இனிமே இப்படித்தான்.. அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களுக்கு ஷாக் கொடுத்த தயாரிப்பாளர் சங்கம்! Cineulagam
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri
ஈரானின் எண்ணெய் குழாய்கள் வெடித்துச் சிதறும்... இன்னும் சில நாட்களில்: ட்ரம்ப் மர்மப் பேச்சு News Lankasri
சாலிகிராமம் வீட்டை இடிக்கும் விஜய்... அடுத்தடுத்து சொத்துக்களை இழக்கும் விஜய்! காரணம் என்ன? Manithan