உயிர்த்த ஞாயிறு தாக்குதல்! - அரசு மீது சுமத்தப்படும் குற்றங்கள் தொடர்பில் பதிலளிப்பு
உயிர்த்த ஞாயிறு தீவிரவாத தாக்குதல், விசாரணைகள் தொடர்பாக அரசாங்கத்தின் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளுக்குப் பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன (Kamal Gunaratne) இன்று பதிலளித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகள், தாம் பாதுகாப்பு செயலாளராக நியமிக்கப்படுவதற்கு முன்னர், பக்கச்சார்பின்றி மேற்கொள்ளப்பட்ட விதத்தில், தமக்கு பொறுப்பேற்க முடியாது என்று அவர் கூறியுள்ளார்.
எனினும், தாம் பாதுகாப்புச் செயலாளராக நியமிக்கப்பட்ட பின்னர், விசாரணைகள் முறையாக நடத்தப்பட்டன, அவை சரியாக நடத்தப்படவில்லை என்று உணர்ந்தபோது, பொறுப்பான அதிகாரிகளை நீக்கிவிட்டு ஏனைய அதிகாரிகள் நியமிக்கப்பட்டனர் என்று அவர் தெரிவித்துள்ளார்.
தொலைகாட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், சில மரியாதைக்குரியவர்கள் கூட 'ஒப்பந்தம்' என்ற வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளனர். எனினும் அதனைத் தாம் நிராகரிப்பதாகக் கமல் குணரத்ன குறிப்பிட்டுள்ளார்.
இந்த தாக்குதல் யாருடைய ஒப்பந்தமும் அல்ல. உலகின் முன்னணி மதங்களில் ஒன்றைத் தவறாகப் புரிந்துகொண்டு நடத்தப்பட்ட போதனைகளால் கண்மூடித்தனமாக இருக்கும் ஒரு குழுவினரின் செயல்களே இதற்கான காரணம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

15 வருட நட்பு, காதல் வந்தது இப்படித்தான்.. மேடையில் விஷால் - தன்ஷிகா ஜோடியாக திருமண அறிவிப்பு Cineulagam
