உறை பனியில் உணவின்றி சிக்கி 5 நாட்களின் பின்னர் உயிர் பிழைத்த அதிசயம்
அமெரிக்காவின் வாஷிங்டனில் உறை பனியில் உணவின்றி சிக்கிய ஒருவர் உயிர் பிழைத்த அதிசயமொன்று நடந்துள்ளது.
68 வயதான லின்னல் மெக்ஃபார்லேண்ட் என்பவரின் கார் எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்து 100 அடி பள்ளத்திற்குள் விழுந்துள்ளது.
இதன் காரணமாக அவருக்கு கை மற்றும் மூட்டு பகுதிகளில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. உடலை உறைய செய்யும் பனியில் சிக்கிய அவர் உதவ யாருமின்றி தனது கார் சீட் பெல்டை கழட்டி கொண்டு, காரின் பின் பக்கத்தில் வந்து பத்திரமாக இருந்துள்ளார்.
எலும்பு முறிவின் காரணமாக அவர் இருந்த இடத்திலிருந்து நகர முடியாத நிலையில், காரில் இருந்த போர்வை மற்றும் துணிகளை கொண்டு தனது உடலை சூட்டுடன் வைத்துக் கொண்டுள்ளார்.
அத்துடன்,பனி மழையில் உருகிய சிறு சிறு பனித்துளிகளை தனக்கான உணவாக பருகி, அவர் உயிர் வாழ்ந்து உள்ளதாகவும்,சுமார் ஐந்து நாட்களுக்கு பிறகு விபத்தில் சிக்கியிருந்த அவரை மீட்புப் படையினர் மீட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சக்தியை கண்டுபிடிக்க போராடும் ஜனனி.. பார்கவியை வீட்டை விட்டு துரத்தும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் புரோமோ வீடியோ Cineulagam
புலம்பெயர்ந்தோருக்கு வேலை கிடையாது... பிள்ளைகளுக்கு பள்ளிகளில் இடம் கிடையாது: ஒரு திடுக் செய்தி News Lankasri
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan