60 வீத உண்மையை கக்கிய சுரேஸ் சாலே - நடுநடுங்கும் கோட்டாபய ராஜபக்ச
2019ஆம் ஆண்டு நடந்த உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் குறித்த விசாரணைகளுக்கு அமைவாக, கடந்த பெப்ரவரி 25 ஆம் திகதி குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் (CID) சுரேஷ் சலே கைது செய்யப்பட்டுத் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் இருந்த போது, தான் மனிதாபிமானமற்ற முறையில் அநாகரிகமான முறையில் நடத்தப்பட்டதாகக் குற்றம் சாட்டி சுரேஷ் சலே சாகும் வரையில் உண்ணாவிரதப் போராட்டம் ஒன்றை ஆரம்பித்திருந்தார்.
இதன் காரணமாக அவரது உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து, அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
தடுத்து வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர் எவ்விதமான சித்திரவதைகளுக்கோ அல்லது மனிதாபிமானமற்ற நடத்தைகளுக்கோ உட்படுத்தப்படவில்லை எனவும், சட்ட நடைமுறைகளுக்கு உட்பட்டே அவர் நடத்தப்படுகிறார் எனவும் இலங்கை பொலிஸ் தலைமையகம் இந்தத் குற்றச்சாட்டுகளைக் திட்டவட்டமாக மறுத்து அறிக்கை வெளியிட்டிருந்தது.
இதற்கிடையில், தற்போது அவர் வைத்தியசாலையிலும் உணவை மறுத்து வருவதாக தெரிவிக்கப்படுகின்ற நிலையில், அவரின் உண்ணாவிரத தீர்மானங்கள் மற்றும் மன அழுத்தத்திற்கான காரணங்கள் குறித்து சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன.
இது தொடர்பில் விரிவாக ஆராய்கின்றது செய்திகளுக்கு அப்பால் நிகழ்ச்சி,