சுரேஷ் சலேயின் கைது: கடுமையாக விமர்ச்சித்த மொட்டுக் கட்சி
துவான் சுரேஷ் சலே கைதுடன் அரசாங்கம் புதிய நாடகம் ஒன்றுக்கு தயாராவதாக மொட்டு கட்சி இன்று (25.02.2026) கட்சி தலைமையகத்தில் நடத்தி செய்தியாளர் மாநாட்டில் அறிவித்துள்ளது.
அந்த மாநாட்டில் உரையாற்றிய சன்ஜீவ எதிரிமான்ன தெரிவித்த கருத்து, கடந்த ஆண்டு ஏப்பிரல் 21 ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை கண்டுபிடிப்பதாக குறிப்பிட்டிருந்தனர், ஆனால் எதுவும் செய்யவில்லை.
புதிய நாடகம் என்னவென்று புரியவில்லை
அதனால் இந்த ஆண்டின் ஏப்பிரல் 21 ஆம் திகதி நெருங்குவதால் ஏதோ ஒரு நாடகத்தை நடத்தப்போவதாக தெரிகிறது. உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலில் முக்கிய தாக்குதல் தாரிகள் இருவரின் தந்தையை தங்களின் தேசிய பட்டியலில் சேர்த்துக் கொண்டவர்கள்.

இது மட்டுமல்ல தங்களின் தேர்தல் மேடைகளில் பிரசாரம் செய்தவரை புலனாய்வு திணைக்களத்தின் பிரதானியாக்கவர்களிடம் இவ்வாறான ஒரு பரிசோதனையை ஏதிர்பார்க்க முடியுமே தவிர வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது.
புதருக்குள் இழுத்துச் செல்லப்பட்டு... வெளிநாட்டில் டாக்ஸி சாரதியால் மீட்கப்பட்ட பிரித்தானிய மாணவி News Lankasri