கோட்டாபயவின் உத்தரவில் சலே செய்த வேலைகள்! விடுதலைப் புலிகள் தொடர்பில் கொடுக்கப்பட்ட பொய்யான அறிக்கை
அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பிரதானி சுரேஷ் சலே, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் அனுமதியோடுதான் அனைத்து வேலைகளையும் செய்தார் என்று முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
வலையொளித் தளம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
ஆரம்பத்தில் இருந்தே சுரேஷ் சலே, கோட்டாபய ராஜபக்சவின் அருகிலேயே தான் இருப்பார். கோட்டாபய ராஜபக்சவிடம் கேட்காமல் எதனையும் சுரேஷ் சலே செய்ததில்லை. கோட்டாபய ராஜபக்சவுக்குத் தேவையானைத் தவிர வேறு எதனையும் சலே செய்ததும் இல்லை.
சலேவை அழைத்த கோட்டாபய
ஆரம்ப காலங்களில் சுரேஷ் சலே போன்று மேலும் சிலர் இருந்தார்கள். அவர்களுக்கு நன்றாக தமிழ் பேசத் தெரியும். இதுபோன்றவர்கள்தான் பின்னர் புலனாய்வுச் சேவைக்குள் இணைத்துக் கொள்ளப்பட்டனர்.
நான் இராணுவத் தளபதியானதன் பின்னர் சுரேஷ் சலே எனக்கு கீழ் பணியாற்றவில்லை. சலே உள்ளிட்ட ஒரு சிலர் வழக்கமாக அலுவலகத்தில் இருந்து முக்கிய அறிக்கைகளை தயார்ப்படுத்தும் வேலைகளை செய்து கொண்டிருந்தனர். எனவே, எனக்கு கீழிருந்து வேறு ஒரு பிரிவிற்கு சுரேஷ் சலே உள்ளிட்டவர்களை மாற்றினோம்.

சலே எனக்குக் கீழ் பணியாற்றியிருக்கவில்லை. ஆனால், சலேயைப் பற்றி நன்றாக எனக்குத் தெரியும். சலே உள்ளிட்டவர்களை எனக்கு கீழ் இருந்து நீக்கிய பிறகு அவர்களை, கோட்டாபய ராஜபக்ச தமக்கு கீழ் பணியாற்றுமாறு, கொழும்பில் பாதுகாப்பு அமைச்சின் செயலகத்திற்கு அழைத்துக் கொண்டார்.
இராணுவத்திற்குள் இருந்துகொண்டு, கொழும்பில் அலுவலகத்தில் இருந்து பணியாற்றுவது போல தான் அவர்கள் பணியாற்றினர். அவர்கள் கொடுத்த சில அறிக்கைகள் பிழையான தகவல்களைக் கொண்டிருந்தது.
உதாரணமாக, நான் இராணுவத் தளபதியானபோது, சலே உள்ளிட்டவர்கள் தந்த அறிக்கையின் படி, விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்த மொத்த போராளிகள் 9 ஆயிரம் பேர் என்று இருந்தது. எனினும், அது ஒரு தவறான அறிக்கை என்பது எனக்குத் தெரியும்.

எனவே, சலே, ஹெந்த விதாரண உள்ளிட்ட அதிகாரிகளை இடமாற்றி, அந்த இடத்திற்கு யுத்தக் களத்தில் நேரடியாக இருந்து பணியாற்றிய அதிகாரிகளை நியமித்தோம்.
அந்த நேரத்தில் விடுதலைப் புலிகள் அமைப்பில் மொத்தம் 30 ஆயிரம் பேர் வரை இருக்கலாம் என நான் கணித்திருந்தேன். அதேபோல, அதன் பின்னரான அறிக்கைகள் மற்றும் கணக்கெடுப்புகளின் ஊடாக கிட்டத்தட்ட 32ஆயிரம் பேருக்கும் அதிகமான விடுதலைப் புலிகள் அமைப்பின் போராளிகள் இருப்பதாக கண்டறியப்பட்டது.
எனவே, சலே உள்ளிட்டவர்கள் இராணுவத்திற்குள் இருந்து, இப்படியான வேலைகளைத் தான் செய்து கொண்டிருந்தனர் என குறிப்பிட்டுள்ளார்.
'வாளமீனுக்கும் விலாங்கு மீனுக்கும்' பாடலுக்கு நடனமாடிய நடிகை மாளவிகா வா இது! லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ Cineulagam
படையெடுப்புக்குத் தயாராகும் அமெரிக்கா... நேருக்கு நேர் போர் என அதிரடியாக அறிவித்த ஈரான் News Lankasri