சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்ட டிப்பர் வண்டிகளுடன் ஐவர் கைது
தர்மபுர பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கல்லாறு பகுதியில் அனுமதிப்பத்திரத்திற்கு முரணான வகையில் மணல் அகழ்வில் ஈடுபட்ட 4 டிப்பர் வண்டிகளுடன் ஐவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தக் கைது நடவடிக்கையானது நேற்றைய தினம்(19.07.2026) இடம்பெற்றுள்ளது.
சட்டவிரோத மணல் அகழ்வு
சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபடுவதாக பொலிஸாருக்குக் கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலொன்றை அடுத்து திருகோணமலை பொலிஸார் விசேட சுற்றிவளைப்பொன்றை மேற்கொண்டுள்ளனர்.
இதன்போது சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்டிருந்த 4 டிப்பர் வண்டிகளும் ஒரு உளவு இயந்திரமும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன் 5 சாரதிகளும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் (22.07.2026) ஆம் திகதி கிளிநொச்சி நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
குறித்த கல்லாறு பகுதியில் தற்போது வெளி மாவட்டங்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வரும் மணலானது கட்டுமானப் பணிகளுக்கு உகந்ததாக காணப்படவில்லை எனவும் உப்பு மணலினையே கல்லாறு பகுதியில் இருந்து வெளி மாவட்டங்களுக்கு விற்பனை செய்யப்படுவதாகவும் தர்மபுர பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம். திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
'வாளமீனுக்கும் விலாங்கு மீனுக்கும்' பாடலுக்கு நடனமாடிய நடிகை மாளவிகா வா இது! லேட்டஸ்ட் புகைப்படங்கள் இதோ Cineulagam
படையெடுப்புக்குத் தயாராகும் அமெரிக்கா... நேருக்கு நேர் போர் என அதிரடியாக அறிவித்த ஈரான் News Lankasri