அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்கல் செய்யாத சலே! சட்டவல்லுனர்களின் தெளிவுபடுத்தல்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தால் (CID) கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள சுரேஷ் சலேவை வைத்து முன்னெடுக்கப்படும் அரசியல் சதி குறித்து சட்ட வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அடிப்படை உரிமை மனு
அவர் தடுப்புக் காவலில் இருந்தபோது சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டிருந்தால் முதற்கட்டமாக செய்ய வேண்டியது உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்றைத் தாக்கல் செய்வதாகும் என சட்ட வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இத்தகைய மனுவொன்றை சுரேஷ் சலேயின் குடும்ப உறுப்பினர்கள் அல்லது அவர் சார்பில் முன்னிலையாகும் எவரேனும் சமர்ப்பிக்க முடியும் எனவும் உயர் நீதிமன்றம் இவ்வாறான மனுக்களை மிக விரைவில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இருப்பினும் அத்தகைய சட்டப்பூர்வமான எந்தவொரு நடவடிக்கையையும் எடுக்காமல் சுரேஷ் சலேயை சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்திற்கு தூண்டிவிட்டு பல்வேறு ஊடகப் பிரசாரங்களைப் பெற்றுக்கொடுத்து அவரை வைத்தியசாலையில் அனுமதிக்கும் நிலைக்கு கொண்டு வந்தமையானது சட்டத்தில் இருந்து தப்பிக்க ஒரு அரசியல் சதியை முன்னெடுத்துள்ளதாக தெளிவாகியுள்ளது.
சரேஷ் சலேவுக்காக முதலில் முன்னிலையாவதாகக் கூறிய சட்டத்தரணி உதய கம்மன்பில நீதிமன்றத்தில் முன்னிலையாகாமல் தற்போது அக்குடும்பத்தின் ஊடகப் பேச்சாளராக மாறியுள்ளார்.