சுரேஷ் சலேயின் மடிக்கணினியில் இராணுவ ரகசியங்கள் எதுவுமில்லை..! அடித்து கூறும் சட்டத்தரணி
முன்னாள் தேசிய புலனாவுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேயின் மடிக்கணினியில் எதுவித இராணுவ ரகசியங்களும் இல்லை என்று அவரது சட்டத்தரணி தெரிவித்துள்ளார்.
ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே, இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றபோது, தனது மடிக்கணினிகள் (Laptop) மற்றும் கைபேசிகள் உள்ளிட்ட அனைத்து உத்தியோகபூர்வ உடைமைகளையும் இராணுவத் தளபதியிடம் முறையாக ஒப்படைத்துள்ளார் என்றும் அவரது சட்டத்தரணி சஞ்சீவ வீரவிக்ரம குறிப்பிட்டுள்ளார்.
சுரேஷ் சலே
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு சுரேஷ் சலே இராணுவத்திலிருந்து விலகியபோது, தனது சீருடை, குறிப்பேடுகள், உத்தியோகபூர்வ அறிக்கைகள், பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட துப்பாக்கிகள், வாகனங்கள் மற்றும் அனைத்து டிஜிட்டல் சாதனங்களையும் இராணுவத் தளபதியிடம் ஒப்படைத்துவிட்டார்.

இது குறித்து குற்றப் புலனாய்வுத் துறை தகவல் அறிய விரும்பினால், அது இராணுவத் தளபதியை வரவழைத்து, மேற்குறித்த பொருட்கள் முறையாக ஒப்படைக்கப்பட்டுள்ளனவா என்று விசாரிக்கலாம்.
தற்போது நடைபெற்று வரும் எந்தவொரு விசாரணைக்கும் தொடர்புடைய எந்த உபகரணமும் சுரேஷ் சலேவிடம் இல்லை. சலேவிடம் தற்போது 2024-ல் வாங்கப்பட்ட ஒரு HP மடிக்கணினியும், ஒரு ஐபோன் 12 கைபேசியும் மட்டுமே உள்ளன, அவை இந்த விசாரணைகளுக்குத் தொடர்புடைய காலத்திற்குப் பிறகு வாங்கப்பட்டவையாகும்.
மேலும், அந்தச் சாதனங்களில் சலேவுக்கும் அவரது மனைவிக்கும் இடையேயான தனிப்பட்ட உரையாடல்கள் மற்றும் அவரது மகளின் புகைப்படங்கள் போன்ற தனிப்பட்ட தரவுகள் மட்டுமே உள்ளன.
இராணுவ ரகசியங்கள்
இந்தத் தனிப்பட்ட சாதனங்களின் கடவுச்சொற்களை வழங்க மறுக்கும் முடிவு, தனியுரிமை மற்றும் தரவுப் பாதுகாப்பு உரிமையின் அடிப்படையில் எடுக்கப்பட்டுள்ளது.

எதாவதொரு குற்றச் செயலுடன் உள்ள தொடர்பை உறுதிப்படுத்தாமல், எந்தவொரு தனிநபரின் தனிப்பட்ட தரவுகளையும் குடும்பத் தகவல்களையும் பெறுவதற்கு குற்றப் புலனாய்வுத் துறைக்கு சட்டப்பூர்வ உரிமை இல்லை. அத்தகைய தரவுகளைப் பெறுவதற்கு, அது தொடர்பான தகவல்கள் நீதவான் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டு முறையான அனுமதி பெறப்பட வேண்டும்.
கடவுச்சொற்கள் இல்லாமலேயே விசாரணைகளை நடத்துவதற்குத் தேவையான தொழில்நுட்ப வசதிகளைக் கொண்ட நிறுவனங்கள் இருந்தாலும், தனது கட்சிக்காரரின் தனியுரிமையைப் பாதிக்கும் எந்தவொரு தகவலையும் குற்றப் புலனாய்வுத் துறைக்கு வழங்க மாட்டோம் என்றும் சட்டத்தரணி சஞ்சீவ வீரவிக்ரம தொடர்ந்தும் வலியுறுத்தியுள்ளார்.
உலக கோப்பை கால்பந்து: போட்டிக்கு பிறகு உடை மாற்றும் அறையில் ஈரான் வீரர்கள் விட்டுச் சென்ற கடிதம் News Lankasri
கடக ராசியில் வக்ர பெயர்ச்சியடையும் புதன் : இந்த ராசிகளின் வாழ்வில் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! Manithan