சுரேஷ் சாலேவை தொலைபேசியில் தொடர்பு கொண்ட சஹ்ரான்! சரத் பொன்சேகா பகிரங்கப்படுத்தியுள்ள தகவல்கள்
உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் பிரதான சூத்திரதாரியான சஹ்ரான் 2012 ஆம் ஆண்டு முதல் துவான் சுரேஷ் சாலேவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டிருந்ததாக ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு முன்னிலையில் தான் தெரிவித்துள்ளதாக பீல்ட் மார்ச்ல் சரத் பொன்சேகா 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போது தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில், சுரேஷ் சாலேஇன்று காலை கைது செய்யப்பட்டுள்ள நிலையில், சரத் பொன்சேகாவின் உரை அடங்கிய குறித்த காணொளி தற்போது சமூக ஊடகங்களில் பேசுபொருளாகியுள்ளது.
அன்று அவர் தெரிவித்த கருத்துக்களுக்கு நீதி கிடைக்கவில்லை.
துவான் சுரேஷ் சாலேவின் செயற்பாடுகள்
இந்த காணொளியில் சுரேஷ் சாலே தொடர்பான பல தகவல்களை சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். அன்று அவர் தெரிவித்த கருத்தில் இருந்து,
இறுதி போர் முடிந்த கையோடு 2010 ஆம் ஆண்டின் பின்னர் சஹ்ரான் புலனாய்வு பிரிவில் இணைந்து செயற்பட்டார்.
கோட்டாபயவுடன் மிகவும் நெருக்கமாக செயற்பட்டவர்.இராணுவ புலனாய்வு துறையின் பிரதானியாக சுரேஷ் சாலே செற்பட்டபோது சஹ்ரான் எவ்வித பயமும் இல்லாமல் செயற்பட்டார்.
ஆனால் நான் சாலேவை பக்கம் தள்ளி வைத்தே செயற்பட்டேன்.தமிழ் தெரிந்ததாலே அவரை புலனாய்வு பிரிவில் சேர்ந்துக் கொண்டுள்ளனர். கோட்டாபயவுக்கு விசுவாசமானவராக செயற்பட்டவர்.

2010 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தல் அன்று வவுனியா மற்றும் கிழக்கு மாகாணங்களில் குண்டு வெடிப்பு நடத்தப்பட்டது.அப்போது சுரேஷ் சாலே வவுனியாவில் இருந்து கொண்டு இதை செய்துள்ளார்.
மைத்திரிபால சிறிசேன இந்தியாவில் இருக்கும் போது சுரேஷ் சாலே அவரை சந்தித்துள்ளார்.ஈஸ்டர் குண்டு தாக்குதலில் சாலே மத்தியில் இருந்து செயற்பட்டவர். அதனால் பிரதான சூத்திரதாரி இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
விடுதலைப் புலிகள் - தமிழ்ச்செல்வன் விவகாரத்தில் உயிரை பணயம் வைத்த சுரேஸ் சாலே! அலி சப்ரி விடுக்கும் எச்சரிக்கை
திருமணம் செய்யப்போகும் விஜய் தேவரகொண்டா-ராஷ்மிகா இருவருக்கும் உள்ள வயது வித்தியாசம்... எவ்வளவு தெரியுமா? Cineulagam