தமிழ் பேசும் இனத்தவர்களை அடக்கினால் அழிந்தே போவீர்! அரசுக்கு ரிஷாத் பகிரங்க எச்சரிக்கை
"இலங்கையில் தமிழ் பேசும் இனத்தவர்களை அடக்க நினைக்காதீர்கள். நாட்டின் மீது பாசத்துடன் நடந்து கொள்ளுங்கள். இதை மீறிச் செயற்பட்டால் உங்களுக்குத்தான் வீழ்ச்சி ஏற்படும். அது அழிவுக்கே வழிவகுக்கும்."- இவ்வாறு அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் அரசுக்குப் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை, உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கை மீதான விவாதத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் தெரிவித்ததாவது,
"இலங்கையில் கடந்த 10 வருடங்களாகவே முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன. இந்தக் காலப்பகுதியில் அளுத்கம, திகன, கொழும்பு கிராண்ட்பாஸ் ஆகிய பிரதேசங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இந்நிலையில் தற்போது சஹ்ரானின் செயற்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு முஸ்லிம்களுக்கு எதிரான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
ஆனால், உண்மையான முஸ்லிம்கள் சஹ்ரான் போன்றோரின் செயற்பாடுகளை அங்கீகரிக்கமாட்டார்கள். உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலுடன் தொடர்புடைய குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும்.
அதேபோன்று அந்த விடயத்தில் கைது செய்யப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான அப்பாவிகளை அரசு விடுதலை செய்ய வேண்டும்" என தெரிவித்துள்ளார்.
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam