ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு ஆதரவளியுங்கள்! - சர்வதேச நாடுகளிடம் சம்பந்தன் கோரிக்கை
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் பங்கேற்கும் ஒவ்வொரு நாடும் இலங்கையில் ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் இந்த கோரிக்கையினை விடுத்துள்ளார்.
ஊடகங்களிடம் பேசிய அவர் இதனை கூறியுள்ளார். “ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 46வது அமர்வில் போரின் போது போர்க்குற்றங்களைச் செய்தவர்களைத் தண்டிக்க உறுதியான தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக தமிழ் அரசியல் கட்சிகள் சமர்ப்பித்த தீர்மானத்தை மற்ற நாடுகள் ஆதரிக்க வேண்டும் அவர் வலியுறுத்தியுள்ளார். எவ்வாறாயினும், பிரித்தானியா முன்வைத்துள்ள அறிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததல்ல என்று பல தமிழ் அரசியல் கட்சிகள் முடிவு செய்துள்ளதாகவும் இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தம் முடிவடைந்து 11 ஆண்டுகள் கடந்துவிட்டன, ஆனால் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வழங்க யாரும் தலையிடவில்லை, குறைந்தபட்சம் இப்போது சர்வதேச சமூகம் இந்த பிரச்சினையில் கவனம் செலுத்த வேண்டும்” என அவர் மேலும் கூறியுள்ளார்.





கேரளாவில் நிற்கும் பிரித்தானிய F-35 போர் விமானம்: இந்தியாவிற்கு லட்சங்களில் கிடைக்கும் வருமானம் News Lankasri
