நாட்டை அழித்த சுப்பர் மேன் - நாடாளுமன்றத்தில் எதிரணி சீற்றம்-செய்திகளின் தொகுப்பு
20வது அரசியலமைப்பு திருத்த சட்டத்தின் ஊடாக சுப்பர் மேனை உருவாக்கியதாகவும் அவர் இறுதியில் நாட்டை அழித்து விட்டு நாட்டை விட்டு தப்பியோடியதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளருமான லக்ஷ்மன் கிரியெல்ல நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
22 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் இரண்டாம் முறை வாசிப்பின் மீதான விவாதத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
20 வது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் தன்னிச்சையாக கொண்டு வரப்பட்டது. 20வது திருத்தச் சட்டம் நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் ஊடாக ஆராய்ப்படவில்லை.
கோட்டாபய ராஜபக்சவின் வழக்கு விசாரணைகளில் முன்னிலையாகி சில சட்டத்தரணிகள் இணைந்து 20வது திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத்திற்கு வெளியில் உருவாக்கினர் என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பான இன்னும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான மாலை நேர செய்திகளின் தொகுப்பு,